» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: உமர் அப்துல்லா பேட்டி
புதன் 7, மே 2025 3:41:28 PM (IST)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலின் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, "பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையிலும், காட்டு மிராண்டித் தனமாகவும் கொல்லப்பட்ட பிறகு, இந்தியா தனது பதிலடி உரிமையை பொருத்தமான மற்றும் விகிதாசார முறையில் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாகிஸ்தானின் எந்தவொரு ராணுவ இலக்கும் தாக்கப்படவில்லை. அதேபோல், பொதுமக்களும் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசும் இந்திய பாதுகாப்புப் படைகளும் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பயங்கரவாத தளங்களை மட்டுமே தாக்கியுள்ளனர்.
ஆனால், பாகிஸ்தான் இந்திய எல்லையின் சில பகுதிகளில் குண்டுவீசித் தாக்கியுள்ளது. அதில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டனர். அவர்கள்தான் தாக்குதலைத் தொடங்கினர், நாம் அல்ல. நாம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நம்மில் யாரும் போரை விரும்பவில்லை. நிலைமை மீண்டும் மேம்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அதற்கு முதலில் பாகிஸ்தான் தனது துப்பாக்கிகளைக் கீழே இறக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு விரைவாகப் பழிவாங்கிய இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களை நான் பெருமையுடன் வணங்குகிறேன். அவர்களின் ஈடு இணையற்ற துணிச்சல் மற்றும் துல்லியத்தால், நமது நாடு மன உறுதியுடன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், உலகம் நமது வலிமையையும் உறுதியையும் கண்டுள்ளது. நமது நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு, நமது ஆயுதப் படைகளுக்கு உறுதியாக ஆதரவளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)
