» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)
உத்தரப் பிரதேசத்தில் அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கைப் பெயிண்டைப் பூச வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: ”பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெறச் செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசுக் கட்டடங்களில் பசு சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை பெயிண்டைப் பயன்படுத்த வேண்டும், அதோடு அதன் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.
பசு பாதுகாப்பு மையங்களில் பராமரிப்பாளர்களை பணியமர்த்தி சரியான நேரத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்குதல், பசுத் தீவனம், தேவையான அளவு தண்ணீர் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கால்நடைகள் இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் ஆதரவற்ற பசு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் பசுக்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 6, மே 2025 10:57:43 AM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)

indianமே 5, 2025 - 09:31:53 PM | Posted IP 162.1*****