» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்

திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து இந்தியா - இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்வலியுறுத்தியுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் 24 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கை கடற்படையில் தொடர் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக மீனவர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; "வங்கக்கடலில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் 24 பேர் தாக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது. இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கையால் காயமடைந்த நாகை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory