» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 2, மே 2025 4:15:23 PM (IST)

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகளை அபகரித்ததாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முடக்கியது
இந்த வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், கடந்த ஏப். 25 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதனால் ராகுல், சோனியா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் நீதிமன்றம், முழுமையான திருப்தி இல்லாமல் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என்று கூறி மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் வழக்கின் இன்றைய விசாரணையில் அமலாக்கத்துறையின் வாதத்தையடுத்து குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா என இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேருக்கு நீதிபதி விஷால் கோக்னே நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.மேலும், அடுத்த விசாரணை மே 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள், விசாரணை தொடர்பாக தங்கள் உரிமையைக் கோரலாம் என்றும் தெரிவித்தார்.
அதாவது, இந்த வழக்கு தற்போது பரிசீலனையில் உள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க சிறப்பு உரிமை உண்டு. நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்கு இது உதவும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)

பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன்: கர்நாடக அமைச்சர் ஆவேசம்!
சனி 3, மே 2025 5:40:21 PM (IST)

கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!!
சனி 3, மே 2025 10:23:13 AM (IST)

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை : வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி!
வெள்ளி 2, மே 2025 12:18:18 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி பிரதமர் மோடி : ரஜினி பேச்சு
வியாழன் 1, மே 2025 8:13:54 PM (IST)

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் : ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமல்!
வியாழன் 1, மே 2025 12:36:29 PM (IST)
