» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி பிரதமர் மோடி : ரஜினி பேச்சு

வியாழன் 1, மே 2025 8:13:54 PM (IST)



ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி பிரதமர் மோடி என்று WAVES உச்சி மாநாட்டில் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். 

மும்பையில் நடந்த சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் (WAVES) உச்சி மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த், "பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்றத் தாக்குதலுக்கு பின்னர், இந்த நிகழ்வின் பொருள் பொழுதுபோக்கு என்பதால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க, அரசு இந்த நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும் என்று பலர் என்னிடம் தெரிவித்தனர். 

ஆனால் இந்த நிகழ்வு நடக்கும் என்று நான் உறுதியுடன் இருந்தேன். ஏனெனில் நமது பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு போராளி, எந்தச் சூழ்நிலையையும் அவர் எதிர்கொள்ளுவார், கடந்த பத்தாண்டுகளாக எந்தச் சூழ்நிலைகளையும் அவர் திறமையாகவும் அழகாகவும் கையாண்டுள்ளார். அவர், காஷ்மீரில் அமைதியையும் நாட்டுக்கு பெருமையையும் கொண்டுவருவார்.

நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த WAVES-ல் ஒரு பகுதியாக இருப்பது எனது பாக்கியம். மத்திய அரசுக்கு எனது பாராட்டுக்கள்" என தெரிவித்தார். ஜியோ வோர்ல்ட் சன்வென்ஷன் சென்டரில், சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் உச்சி மாநாடு 2025- ஐ வியாழக்கிழமை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்துறைகளுக்கு இது வரலாற்றுத்தருணம் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory