» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாக். கமாண்டோ வீரர்: ஜிப்லைன் ஆபரேட்டரிடம் விசாரணை
புதன் 30, ஏப்ரல் 2025 11:42:08 AM (IST)

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவர்களின் ஒருவன் பாகிஸ்தானின் மாஜி கமாண்டோ வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், 100க்கும் மேற்பட்டோரை காவலில் எடுத்து காஷ்மீர் போலீசார் தனியாக விசாரித்து வருகின்றனர். 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் 3 பேரின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
தொடர் விசாரணைகளில், தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஹாஷிம் மூசா என்பவன், பாகிஸ்தானின் சிறப்பு காவல் படையின் (எஸ்எஸ்ஜி) முன்னாள் கமாண்டோ வீரராக இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினராக இருக்கும் ஹாஷிம் மூசா, பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் அல்லாதவர்கள் மீது தாக்குதல்களை நடத்த ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளான்.
உளவு அமைப்புகள் நடத்திய விசாரணையின் போது மூசாவின் ராணுவப் பின்னணி உறுதி செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி கூறினார். தீவிரவாதி ஹாஷிம் மூசா, ஏற்கனவே கடந்தாண்டு அக்டோபரில், கங்காங்கிர், காண்டர்பாலில் நடந்த தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையவன் ஆவான்.
மேலும் பாரமுல்லாவில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு ராணுவ போர்ட்டர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவனுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் கூறி வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய ஒருவன் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளான் என்பது அம்பலமாகி உள்ளது.
ஜிப்லைன்’ ரோப் ஆபரேட்டருக்கு தொடர்பு?
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு ‘ஜிப்லைன்’ ஆபரேட்டருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்த விசாரணை நடைபெறும் நிலையில், சுற்றுலா பயணியின் வீடியோ வைரலாகி வருகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த போது அங்கிருந்த சுற்றுலா பயணி ரிஷி பட் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘நான் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளேன்.
சம்பவம் நடந்த நேரத்தில் ‘ஜிப்லைனில்’ சென்றேன். அப்போது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டன. ஜிப்லைன் ஆபரேட்டர், ‘அல்லாஹு அக்பர்’ என்று கத்தினார். அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்தது. நான் ரோப்வேயில் இருந்ததால், என் உயிர் காப்பாற்றப்பட்டது.
தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் அணியும் உடை போன்ற உடையணிந்திருந்தனர். துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, சம்பவ இடத்தில் உள்ளூர்வாசிகள் யாரும் இல்லை. அவர்கள் நிலையையை உணர்ந்து ஓடிவிட்டனர். சிலர் மட்டுமே உதவ வந்தனர்’ என்று கூறினார். சுற்றுலா பயணி ரிஷி பட்டின் பேட்டியை அடிப்டையாக கொண்டு, ஜிப்லைன் ஆப்ரேட்டருக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)

பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன்: கர்நாடக அமைச்சர் ஆவேசம்!
சனி 3, மே 2025 5:40:21 PM (IST)

கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!!
சனி 3, மே 2025 10:23:13 AM (IST)

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 2, மே 2025 4:15:23 PM (IST)

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை : வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி!
வெள்ளி 2, மே 2025 12:18:18 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி பிரதமர் மோடி : ரஜினி பேச்சு
வியாழன் 1, மே 2025 8:13:54 PM (IST)
