» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குருத்வாராவில் சீக்கிய மத குரு சுட்டுக் கொலை : உத்தரகாண்டில் பயங்கரம்

வெள்ளி 29, மார்ச் 2024 8:30:45 AM (IST)



குருத்வாராவில் சீக்கிய மத குரு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் ருத்ராபூர்-தனக்பூர் சாலையில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா அமைந்துள்ளது. நானக்மட்டா சாஹிப் குருத்வாரா எனப்படும் இந்த குருத்வாராவின் தலைவராக பாபா தர்செம் சிங் என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பாபா தர்செம் சிங் குருத்வாராவுக்குள் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பாபா தர்செம் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 2 குண்டுகள் பாபா தர்செம் சிங்கின் உடலை துளைத்தன. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையில் பாபா தர்செம் சிங்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். குருத்வாராவில் சீக்கிய மத குரு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே சீக்கிய மத குருவை சுட்டு விட்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அதனை அடிப்படையாக கொண்டு கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "தாக்குதல் நடத்தியவர்களின் தெளிவான வீடியோக்கள் எங்களிடம் உள்ளன. அவர்கள் இருவரும் சீக்கியர்கள் ஆவர். கொலையாளிகளை கைது செய்ய 8 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்” என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory