» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்: ராகுல் காந்தி பேச்சு

வெள்ளி 26, ஏப்ரல் 2024 5:48:53 PM (IST)

முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்துவார் என்று ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் பிஜப்பூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: பிரதமர் மோடியின் பேச்சுகளைப் சில நாட்களாக பார்க்கிறீர்கள்; அவர் பதற்றமாக இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமர் மோடி மேடையில் கண்ணீர் சிந்துவார். 24 மணி நேரமும் மக்களை திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் ஈடுபடுகிறார். முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு அவர் பீதி அடைந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே பிரதமர் பறித்துள்ளார். நாட்டின் 70 கோடி மக்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதே அளவு பணத்தை 22 பேருக்கு கொடுத்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தை சரிசெய்ய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். இதன் மூலம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். பிரதமர் மோடி சிலரை கோடீஸ்வரர்களாக்கினார்; ஆனால் காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


மக்கள் கருத்து

ஓனந்த்Apr 27, 2024 - 10:12:14 AM | Posted IP 162.1*****

இத்தாலிய பப்பு தான் பல வேடம் போடுவார்ப்ல , அவரு பிராமினாம் . அது எப்படி? இந்து குடும்பத்தில் பிறந்தவரா ?

ஆனந்த்Apr 27, 2024 - 07:32:35 AM | Posted IP 172.7*****

மோடி என்று சொல்ல வேண்டாம் வேஷதாரி என்று சொல்லுங்கள்

Apr 26, 2024 - 06:35:52 PM | Posted IP 162.1*****

அந்த பப்பு தாய்லாந்துல போய் குச்சி ஐஸ் சாப்பிட்டு பேதில போவான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory