» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜனவரி 14ம் தேதி முதல் முதல் மீண்டும் நடைப் பயணத்தை தொடங்குகிறாா் ராகுல் காந்தி!!

வியாழன் 28, டிசம்பர் 2023 12:24:46 PM (IST)

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை மணிப்பூரில் இருந்து தொடங்குகிறாா்.

‘பாரத நியாய யாத்திரை (பாரத நீதிப் பயணம்)’ என்ற பெயரிலான இந்த நடைப்பயணம் நாட்டின் கிழக்கிலிருந்து தொடங்கி நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயம், மேற்குவங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைக் கடந்து கடைசியாக நாட்டின் மேற்கான மகாராஷ்டிரம் வரை சுமாா் 6,200 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டு, மாா்ச் 20-ஆம் தேதி நிறைவடையும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக, ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ என்ற பெயரில் நாட்டின் தெற்கிலிருந்து வடக்காக, தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை ராகுல் தலைமையில் முதல்கட்ட நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி தொங்கிய இந்த நடைப்பயணம் 136 நாள்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 4,081 கி.மீ. தொலைவைக் கடந்த காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நடைப்பயணத்தின்போது 12 பொதுக்கூட்டங்கல், 100 தெருமுனைக் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினாா்.

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்தது. இந்த நடைப்பயணத்துக்குப் பின்னா் நடைபெற்ற கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இது அக்கட்சித் தொண்டா்களிடையே உத்வேகத்தையும் அளித்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் தலைமையில் நாட்டின் கிழக்கிலிருந்து மேற்காக இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை மேற்கொள்வதற்கான தீா்மானம், தில்லியில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடா்ந்து, அதற்கான அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘மணிப்பூா் தலைநகா் இம்பாலில் வரும் ஜன.14-ம் தேதி கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நடைப்பயணத்தை தொடங்கிவைக்க உள்ளாா். நாட்டு மக்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதியை பாதுகாப்பதை இந்த நடைப்பயணம் கவனம் செலுத்தும்’ என்றாா்.

அக்கட்சியின் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘மணிப்பூா் மக்களின் காயங்களுக்கு மருந்திடும் விதமாக, நடைப்பயணத்தை அங்கு தொடங்க முடிவு செய்யப்பட்டது’ என்றாா்.

மணிப்பூரில் குகி மற்றும் மைதேயி சமூகத்தினரிடையே கடந்த மே 3-ஆம் தேதி மிகப் பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டு, 3 மாதங்களுக்கும் மேல் நீடித்தது. இந்த கலவரத்தில் 200 போ் உயிரிழந்தனா், 60,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

TAMILANDec 31, 2023 - 11:05:25 AM | Posted IP 172.7*****

இவரை போலவே செபாஸ்டியன் சைமன் என்று ஒரு சூப்பர் கோமாளி தமிழ்நாட்டில் இருக்கிறார் அவரையும் நடை பயணத்திற்கு கூட்டிட்டு போகவும் லூசு கோமாளிக்கு கொலஸ்ட்ரால் குறையும்.

உண்மDec 30, 2023 - 10:08:26 AM | Posted IP 172.7*****

பணத்தை வைத்து சும்மா செலவு பண்ணி சொகுசு வாகனத்தில் ஊர் ஊராக சுற்றுவது தான் பப்புக்கு பொழுதுபோக்கு.

ஆ சாமி அவர்களேDec 30, 2023 - 10:06:37 AM | Posted IP 172.7*****

ஓ அந்த சாராய ஆலய ஓனர் கட்டுமர குடும்பமா? ஆமா தமிழ்நாட்டை கொள்ளையடித்து இருக்கிறது.

சாமிDec 29, 2023 - 03:16:34 PM | Posted IP 172.7*****

இங்கே ஒரு முட்டாள் ஒன்பது வருசமாக நாட்டை கெடுத்து கொண்டு இருக்கிறான் ...

இவன்Dec 29, 2023 - 10:00:58 AM | Posted IP 162.1*****

விளங்காத முட்டா பய, தாய்லாந்து பார் ல போய் குடித்து விட்டு வந்த பப்பு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory