» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காசாவிற்கு ஏற்பட்ட கதியை இந்தியா சந்திக்க நேரிடும்: பரூக் அப்துல்லா எச்சரிக்கை!

செவ்வாய் 26, டிசம்பர் 2023 4:48:00 PM (IST)

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் அமைச்சருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: நமது நண்பர்களை மாற்றலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்றமுடியாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார்.

அண்டை நாட்டுடன் நட்பாக இருந்தால் இருவரும் முன்னேற முடியும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடரவேண்டியது அவசியம். தற்போது நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார்.நாங்கள் இந்தியாவுடன் பேசத் தயார் என சொல்கிறார்கள். பாகிஸ்தானுடன் பேச நாம் ஏன் தயாராக இல்லை?

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலியப் படைகளால் குண்டுவீசித் தாக்கப்படும் காசாவிற்கு ஏற்பட்ட கதியை இந்தியா சந்திக்க நேரிடும். அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory