» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் புதிதாக 628 பேருக்கு கோவிட் பாதிப்பு: கேரளாவில் ஒருவர் உயிரிழப்பு

திங்கள் 25, டிசம்பர் 2023 5:20:41 PM (IST)

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,054ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் ஓர் உயிரிழப்பும் பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே, மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் 20 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில், ஜேஎன்.1 வகை மாறுபாடு 5 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. 

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒரேநாளில் புதிதாக 656 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்திருந்தது. அன்றைய தினமும் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

அதேவேளையில், இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தப் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory