» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மசூதிக்குள் புகுந்து போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

திங்கள் 25, டிசம்பர் 2023 10:24:35 AM (IST)

காஷ்மீரில் மசூதிக்குள் புகுந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஷபி மிர் (72). போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அங்குள்ள ஒரு கிராம மசூதியில் இமாமுக்கு அடுத்தப்படியான பொறுப்பில் இருந்து வந்தார். அதன்படி தினமும் 5 வேளை, ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் பணியை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் பணி மேற்கொள்ள முகமது ஷபி மசூதிக்கு சென்றார். பின்னர் அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கி வழியாக தொழுகைக்கு அழைப்பு விடுத்து அரபி மொழியில் பிரார்த்தித்து கொண்டிருந்தார். அப்போது மசூதிக்குள் பயங்கரவாதிகள் சிலர் கும்பலாக ஊடுருவினர். 

பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முகமது ஷபியை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர். அவர் அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் மசூதிக்கு விரைந்தனர். அப்போது ரத்தவெள்ளத்தில் முகமது ஷபி விழுந்து கிடப்பதை பாா்த்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் முகமது ஷபி மிர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மசூதிக்குள் புகுந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கலை பதிவிட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory