» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக மழை வெள்ள சேதங்கள்: பிரதமர் அலுவலகம் ஆலோசனை!

ஞாயிறு 24, டிசம்பர் 2023 6:53:04 PM (IST)

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசுடன் பிரதமர் அலுவலகம் ஆலோசனை மேற்கொண்டது.

கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தையே மழை புரட்டி போட்டது. ஏரல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றளவும் தண்ணீர் வடியாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலரும் உதவி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசுடன் பிரதமர் அலுவலகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு வந்து ஆய்வு செய்தது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. 

மழை வெள்ள சேதங்கள் குறித்து மதிப்பிட, பல்வேறு துறை சார்ந்த குழு வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மீட்பு பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேவை குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory