» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வணிக சிலிண்டர் விலை ரூ.39.50 குறைப்பு : எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

சனி 23, டிசம்பர் 2023 11:38:16 AM (IST)

வணிக சிலிண்டர் விலையை 39 ரூபாய் 50 பைசாவை குறைத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. 

ஓட்டல்கள், டீ கடைகள் போன்ற வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப விலை மாற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முடிவு செய்கின்றன. அதன்படி கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை 57 ரூபாய் 5 பைசா குறைந்தது.

தொடர்ந்து இந்த மாதமும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சிலிண்டருக்கு 39 ரூபாய் 50 பைசாவை குறைத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த விலை குறைப்பு மூலம் சென்னையில் வணிக பயன்பாடு சிலிண்டர் சிலை ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டாலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory