» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்துக்கு ரூ.900 கோடியை மத்திய அரசு வழங்கிவிட்டது: நிர்மலா சீதாராமன் பேட்டி

வெள்ளி 22, டிசம்பர் 2023 3:57:20 PM (IST)

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடியை மத்திய அரசு வழங்கிவிட்டது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிவதற்கு முன்பாகவே, பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் இறங்கினர்.

இந்திய ராணுவத்தின் 9 ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விமானப்படை, கடற்படை மூலமும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றன. நெல்லை மற்றும் தூத்துக்குடியில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரம் பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

தென் மாவட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் சிக்கிய 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். களப்பணிகள் விரைந்து நடைபெற்றதால், அதிகமான மக்கள் மீட்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துளள்ர்.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மத்தியப் படையினர் விரைந்து செயல்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை மூலம் ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளனர். 4 தென் மாவட்டங்களுக்கும் உடனடியாக உதவும்படி நான் வைத்தக் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக உதவிகளை அளித்தார்.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய இரண்டாவது தவணை டிசம்பர் 12ஆம் தேதியே அதாவது முன்கூட்டியே வழங்கப்பட்டுவிட்டது. தென் மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே, மத்திய அரசு, நிலுவைத் தொகையை வழங்கிவிட்டது.  அதாவது, இந்த ஆண்டு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.900 கோடியையும் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று டிசம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய வானிலை தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதாவது, தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை என்றும், தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பாதித்த அன்றும், 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவு செய்யப்பட்டது.  கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுத்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்தது ஏன்? 

பாதித்த இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றனர். மழை, வெள்ள பாதிப்பிலிருந்து தமிழக அரசு என்ன கற்றுக்கொண்டது. தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது. மாநில அரசு என்ன செய்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு சேய்த ரூ.4,000 கோடி எங்கேப் போனது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை ஆய்வு மையம் மீது குறைகூறுவது ஏன்? என கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து

JAY RAMDec 23, 2023 - 09:30:52 AM | Posted IP 172.7*****

மத்திய பிஜேபி அரசு தமிழ்நாட்டிற்கு செய்யும் நல்ல திட்டங்களை இங்குள்ள ஊடகங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கிறார்கள். மத்திய அரசு செய்யம் நல்ல விஷயங்கள் மக்களுக்கு தெரியவேண்டும் , அதற்கு பிஜேபி தேவையான நடவடிக்கை செய்யவேண்டும்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory