» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை தேவையற்றது : மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

வியாழன் 14, டிசம்பர் 2023 5:28:32 PM (IST)

பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது  என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று (டிச. 13ம் தேதி) மீண்டும் நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாதவிடாய் குறித்து நேற்று மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ள பதில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு (உடல் ஊனம்) இல்லை. இது இயற்கையாக பெண்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வு. மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே. 

பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது. மாதவிடாய் வராத ஒருவர் மாதவிடாய் குறித்து குறிப்பிட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்சினைகளை நாம் முன்வைக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory