» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 8 பணியாளர்கள் பணியிடைநீக்கம்

வியாழன் 14, டிசம்பர் 2023 11:50:16 AM (IST)



நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக 8 பணியாளர்களை பணியிடை நீக்கம்  செய்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் 22 ஆண்டு நிறைவையொட்டி, புதன்கிழமை நடந்த ஒரு பெரிய பாதுகாப்பு மீறலில், லக்னௌவைச் சோ்ந்த சாகா் சா்மா மற்றும் கா்நாடகத்தின் மைசூரைச் சோ்ந்த டி.மனோரஞ்சன் ஆகிய இருவர், பூஜ்ஜிய நேரத்தில் பாா்வையாளா் மாடத்தில் இருந்து பிற்பகல் 1.12 மணியளவில் மக்களவை அறைக்குள் குதித்து, சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்தவர்கள், அவைக்குள் குதித்து வண்ணப்புகைக் குப்பிகளை வீசியுள்ளனர். 

அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அமோல் ஷிண்டே மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த நீலம் தேவி ஆகிய இருவர், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே "சர்வாதிகாரம் கூடாது"  என்று முழக்கமிட்டவாறே இதேபோன்று வண்ணப்புகைக் புகைக் குப்பிகளை வீசி வீசியுள்ளனர்.  இந்த சம்பவத்தை திட்டமிட்ட 6 பேர் கொண்ட குழுவில் நால்வரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி)ஆகியவற்றின் தொடர்புடைய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory