» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு: எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 5:11:43 PM (IST)

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கடந்த 10 நாள்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போது முடிவுக்கு வந்ததுள்ளது. ராஜஸ்தானில் 199 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் 115 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.

இந்த நிலையில், ராஜஸ்தானில் முதல்வரை தேர்ந்தெடுக்க ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வான அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.  மாநிலத்தில் முதல்வா் தோ்வுக்கு மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்பட மூன்று பாா்வையாளா்களை கட்சி மேலிடம் நியமித்த நிலையில், எம்எல்ஏ பஜன்லால் சர்மாவை ராஜஸ்தானின் புதிய முதல்வராக பாஜக தேர்ந்தேடுத்துள்ளது.

அதேபோன்று, பிரேம்சந்த் பைரவா மற்றும் தியா குமாரி ஆகிய இருவரும் துணை முதல்வர்களாகவும் செய்ய செய்யப்பட்டனர். வாசுதேவ் தேவ்நானி பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ராஜஸ்தான் முதல்வராக தேர்வான பஜன்லால் சர்மாவுக்கு ராஜ்நாத் சிங் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory