» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்தது தனியார் பால் விலை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
புதன் 25, பிப்ரவரி 2026 5:16:51 PM (IST)
தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்துள்ளதைக் காரணம் காட்டி, தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. இந்தத் திடீர் விலை உயர்வு சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகத்தில் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு நிறுவனமான 'ஆவின்', நிலைமையைச் சமாளிக்க அண்டை மாநிலமான கர்நாடகாவின் 'நந்தினி' நிறுவனத்திடம் இருந்து பால் கொள்முதல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.14 வரை உயர்த்தி வழங்கி வருகின்றன. இந்த கூடுதல் செலவினத்தைச் ஈடுகட்ட, விற்பனை விலையை தற்போது உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வை அமல்படுத்தியுள்ளன.

அதன் விவரம் வருமாறு:
அதேபோல், தயிர் விலையும் கிலோவிற்கு ரூ.2 வரை அதிகரித்துள்ளது. 1 கிலோ சமன்படுத்தப்பட்ட தயிர் ரூ.74-ல் இருந்து ரூ.76 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறுகையில், "கோடை காலம் தொடங்கும் முன்பே பால் உற்பத்தி இவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.
ஏப்ரல், மே மாதங்களில் நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதுகில் குத்தினார்கள்; 9 ஆண்டு காலம் காத்திருந்தேன்: இபிஎஸ் மீது சசிகலா கடும் தாக்கு
புதன் 25, பிப்ரவரி 2026 4:43:18 PM (IST)

நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை: முதல்வர் இரங்கல்
புதன் 25, பிப்ரவரி 2026 4:11:46 PM (IST)

முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார்
புதன் 25, பிப்ரவரி 2026 3:12:05 PM (IST)

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் வரை திமுகவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் : ஸ்டாலின் உறுதி
புதன் 25, பிப்ரவரி 2026 3:11:07 PM (IST)

நான் என்ன தவறு செய்தேன்? அரசியலை விட்டு விலகத் தயார்! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்
புதன் 25, பிப்ரவரி 2026 10:18:51 AM (IST)

நல்லகண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்
புதன் 25, பிப்ரவரி 2026 10:13:52 AM (IST)