» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதுகில் குத்தினார்கள்; 9 ஆண்டு காலம் காத்திருந்தேன்: இபிஎஸ் மீது சசிகலா கடும் தாக்கு

புதன் 25, பிப்ரவரி 2026 4:43:18 PM (IST)

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து வி.கே.சசிகலா உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: "அம்மாவுடன் (ஜெயலலிதா) கூடவே இருந்து நல்லது, கெட்டது அனைத்தையும் பார்த்தவள் நான். 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம். நல்ல நாள் பார்த்து அவரை வீட்டிற்கு அழைத்து வரத் தயாராக இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால், வெளியே இருப்பவர்கள் விதவிதமாகக் கதைகளைக் கட்டினார்கள். நானே அவரைக் கொன்றுவிட்டதாகக் கூடப் பேசினார்கள்."

"நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனை தீர்ப்பு வந்த மறுநாளே நான் பெங்களூரு சிறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், அவசரமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து, இப்போது பதவியில் இருக்கிறாரே இவரை முதலமைச்சராக ஆக்குவது என முடிவெடுத்தேன். இன்று அவரது பெயரைக் கூடச் சொல்ல நான் விரும்பவில்லை. பெயர் சொல்லும் அளவிற்கு அவர் நல்லவர் கிடையாது."

"எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத போது பரோல் கேட்டோம். பெங்களூரு சிறை நிர்வாகம் உடனடியாக 15 நாட்கள் அனுமதி அளித்தது. ஆனால், தமிழக அரசிடம் இருந்து அனுமதி வரவேண்டும் என அவர்கள் கூறினர். நான் யாரை அந்தப் பதவியில் உட்கார வைத்துவிட்டுப் போனேனோ, அவரே எனக்கு அனுமதி அளிக்கவில்லை எனச் சென்னையிலிருந்து பதில் வந்தது."

"எடப்பாடி பழனிசாமி தன்னை மாற்றிக்கொள்வார் என்று கடந்த 9 ஆண்டு காலமாகப் பொறுமையாகக் காத்திருந்தேன். ஆனால், போதுமான அளவு எனது முதுகில் குத்திவிட்டார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அம்மாவின் பிறந்தநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றார். தனது உரையில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை இறுதிவரை குறிப்பிடாமல் வி.கே.சசிகலா கடுமையாகச் சாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory