» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் வரை திமுகவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் : ஸ்டாலின் உறுதி

புதன் 25, பிப்ரவரி 2026 3:11:07 PM (IST)

நீண்டகாலமாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும் வரை திமுகவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 90 வீடுகளை திறந்து வைத்த பின்னர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு ரூ.11.07 கோடி கல்வி உதவித்தொகை மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நீண்டகாலமாக இந்தியாவில் வசித்து வருவோருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை நம் குரல், தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்’ முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory