» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நல்லகண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்

புதன் 25, பிப்ரவரி 2026 10:13:52 AM (IST)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101), உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101),வயது முதிர்வு காரணமாக ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு மற்றும் உணவு உட்கொள்ள இயலாமை போன்ற பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 23) அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:     நல்லகண்ணு அவர்களுக்கு பல்வேறு துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.     உடல்நிலை பாதிப்பால், அவருக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசத்தின் அளவு மற்றும் மருந்துகளின் வீரியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.     தற்போது அவர் 24 மணி நேரமும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் - தலைவர்கள் நேரில் சந்திப்பு

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்:

முதலமைச்சர் வருகை: நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று, டீன் சாந்தாராமன் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி, சேகர்பாபு ஆகியோர் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory