» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் வரும் 24-ம் தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. 

சென்னை - நெல்லை இடையே பகல் நேரத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1.50 சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. 

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. பயணிகளின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டன. தற்போது, 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 24-ம் தேதி முதல் மேலும் 4 பெட்டிகள், அதாவது 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இதனால், கூடுதலாக 312 பேர் பயணிக்க முடியும். இதன் மூலம் ஒரே நேரத்தில், 1,440 பயணிகள் வந்தே பாரத் ரயிலில் செல்லலாம். இதில், 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் அடங்கும். மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory