» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)



ம.தி்.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சியையும், அவர்கள் பயன்படுத்த கட்சி கொடியும் காஞ்சீபுரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அண்ணாவின் 117-வது பிறந்த நாள் விழா, திராவிட ரத்னா விருது வழங்கும் விழா, திராவிட இயக்கம் உதயமான திருநாள் விழா ஆகிய முப்பெரும் விழா காஞ்சீபுரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமை தாங்கினார்.

முன்னதாக காஞ்சீபுரம் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மல்லை சத்யா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பேரணியாக நெல்லுக்கார தெரு, இரட்டை மண்டபம், காமராஜர் வீதி, தாலுகா அலுவலகம் வழியாக விழா நடைபெற்ற இடத்தை அடைந்தனர்.

முப்பெரும் விழாவில் பேராசிரியர் அப்துல் காதர், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. திருப்பூர் துரைசாமி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பேசினர்.

விழாவில் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சியாக செயல்படவும், அவர்கள் பயன்படுத்த புதிய கட்சி கொடியையும் மல்லை சத்யா அறிமுகம் செய்து வைத்தார்.

கட்சி கொடியில் நீளவாக்கில் கருப்பு நிறம் சிறிய அளவிலும், சிகப்பு நிறம் பெரிய அளவிலும், அதில் மஞ்சள் நிறத்திலான ஏழு நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ம.தி.மு.க.வில் இருந்து விலகிய செவிந்தியப்பன், மல்லை சத்யா, செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினரின் ஆலோசனைக்கு பிறகு கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார். எனினும் விழாவில் வழங்கும் நினைவு பரிசில் திராவிட குடியரசு விடுதலைக் கழகம் என பெயர் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory