» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)



சென்னையில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (செப்.16) முதல் செப்.21 ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலையில் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், கோயம்பேடு, ஆயிரம் விளக்கு, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய கனமழை காலை 5 மணி வரை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அதிகாலையில் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இரவு முழுவதும் விடிய, விடிய பெய்த கனமழையால், மயிலாப்பூரில் 80 மிமீ, அயனாவரத்தில் 70 மி.மீ, மேற்கு மாம்பலம், பெரம்பூர், தண்டையார்பேட்டையில் தலா 60 மி.மீ மழையும் பதிவானது.

கனமழை காரணமாக சென்னையில் விமான சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கத்தாரின் தோகாவில் இருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது. மோசமான வானிலை காரணமாக துபை, லண்டன், ஷார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்துவிட்டு தரையிறங்கின. மேலும், சென்னையில் இருந்து 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory