» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:31:34 AM (IST)

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "முதல்-அமைச்சரின் ஆலோசனையின்படி கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதியன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டுக்கான பி.எட். மாணவர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதற்கட்ட கலந்தாய்வுக்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி நேற்று தொடங்கி வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwlase.ac.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இதேபோல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு மாணவர்கள் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி வருகிற 30-ந்தேதி வரை செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory