» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்னி பஸ்சில் கொண்டு வந்த 52 சவரன் நகை மாயம் : போலீசார் விசாரணை
புதன் 10, செப்டம்பர் 2025 8:10:44 PM (IST)
சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வந்த 52 பவுன் நகைகள் மாயமாது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மண்ணடியில் பழைய நகைகளை புது நகைகளாக மாற்றி வியாபாரம் செய்பவர் ஆரிஃப். இவர், தனது 52 பவுன் நகைகளை சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் சிவபாலனிடம் கொடுத்து இந்த நகையை ஆறுமுகனேரியில் காத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த அபுதாஹிரிடம் (48) கொடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தார்.
கடந்த 8 ஆம் தேதி இரவு சென்னை கோயம்பேடில் இருந்து திருச்செந்தூருக்குப் புறப்பட்ட அந்த ஆம்னி பேருந்து ஆறுமுகனேரிக்கு வந்ததும் அங்கு காத்திருந்த அபுதாஹிர் நகையை ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அப்போது ஓட்டுநர் சிவபாலன் நகைப் பையைத் தேடியபோது நகைப்பை காணவில்லை.
இதையடுத்து அபுதாஹிர் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், ஆறுமுகனேரி ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஆம்னி பஸ் தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் உள்ள டீக்கடையில் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கு கிளீனர் உள்பட பலரும் இறங்கிச்சென்று டீ குடித்தனர். ஆனால் அங்கிருந்து கிளீனர் மீண்டும் பஸ்சில் ஏறவில்லை. எனவே அங்கிருந்துதான் சுப்பையா நகைப்பையை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருட்டுபோன பையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான 15 வகையான தங்க நகைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பிய கிளீனரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


