» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: கிள்ளியூர் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு!

புதன் 19, ஜூன் 2024 5:49:36 PM (IST)


உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட, கிள்ளியூர் முதல்நிலை பேரூராட்சி அலுவலகம், கிள்ளியூர் மற்றும் புதுக்கடை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் -

தமிழ்நாடு முதலமைச்சர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் வருவாய் துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வழங்கல் துறை, பள்ளி கல்வித்துறை, குடிநீர் வழங்கல் துறை, சமூக நலத்துறை, நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் முதல் நிலை பேரூராட்சி நிவாராண நிதியிலிருந்து ரூ.50 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, 15 ஆவது நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கிள்ளியூர் வட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை நேரில் பார்வையிட்டு, வரி வசூல் மையம், கணினி பிரிவு, இன்டர்நெட் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கல்குளம் விளவங்கோடு வட்டத்துக்குட்பட்ட மார்த்தாண்டம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் சடையன்குழியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், கைரேகை பதிவு முறையாக செயல்படுகிறதா என்பது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் புதுக்கடை அருகில் உள்ள அங்கான்வாடி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரம், பச்சிளங்குழந்தைகளின் எடை, பச்சிளங்குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை நேரில் பார்வையிட்டார்கள். மேலும் மங்காடு ஊராட்சி அலுவலகம், கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட காஞ்சாம்புரம் நூலகம் மற்றும் அறிவுசார்மையத்தினை நேரில் பார்வையிட்டு வரவேற்பாளர் பதிவேடு, நூலகர் மற்றும் பணியாளர் வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர்களுடன் உரையாடினார்கள். வைக்கலூர் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் பரங்காணி தாமிரபரணி ஆற்றின் தடுப்பு அணை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், திட்ட இயக்குநர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), பீபீஜாண் (மகளிர் திட்டம்), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), செந்தில்வேல்முருகன், இணை இயக்குநர்கள் ஆல்பர்ட் ராபின்சன் (வேளாண்மை), சா.லீ.சிவகாமி (கூட்டுறவுத்துறை இணை பதிவாளர்), துணை இயக்குநர் மரு.மீனாட்சி (பொது சுகாதாரம்), ஷீலா ஜாண் தோட்டக்கலைத்துறை, மண்டல இணை இயக்குநர் (கால்நடைதுறை) மரு.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெங்கின் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory