» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்!

புதன் 10, செப்டம்பர் 2025 4:02:00 PM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த  2008 வெடிபொருள் விதிகள் மற்றும் 1884 வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்கள் வருகிற 10.10.2025-ந்தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்களுடன், உரிய கணக்கு தலைப்பின் கீழ் (Head of Account: 0070-other Administrative services 60-other services 103 Receipts under Explosive Act 01 Collector of Distric Authorities E-challan code no. 0070-60-109-AA-22738) அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக்கட்டணம் ரூ.500/-ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியதற்கான அசல் ரசீதினை (செலான்) இணைக்க வேண்டும்.  

மேலும் மனுதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் என்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் என்றால் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதமும் விண்ணத்தாரரின் புகைப்படம், முகவரி சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.  

மேலும் நிர்வாக காரணங்கள் முன்னிட்டு வருகிற 10.10.2025-ம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும பரிசீலனை செய்யப்படும். அக்டோபர் 10-ம் தேதிக்கு பின்னர் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory