» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஸ்டெர்லைட் வழக்கில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:37:02 AM (IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வழக்கில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, 22.5.2018 அன்று, மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை மீறி கும்பலாக சேர்ந்து சட்ட விரோதமாக கூடி பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர். காவல்துறையினரை கடுமையாக மிரட்டி கற்களை வீசி பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கோட்டில் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் நானும் பங்கேற்றதாக கூறி என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நான் ஆஜராகவில்லை என்று கூறி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் என்னை கைது செய்து கடந்த மாதம் 19-ந் தேதி சிறையில் அடைத்தனர். மீனவர் ஆகிய என்னை நம்பி எனது குடும்பம் உள்ளது. தற்போது நான் சிறையில் இருப்பதால் எனது குடும்பத்தினர் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி, மனுதாரர் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஆஜராக வேண்டும். மேலும் மறு உத்தரவு வரும் வரை, வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)

பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)

30% ஊதிய உயர்வு வேண்டும்: 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 3:34:44 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டப் பேரவை உறுதிமொழிக்குழு குழு ஆய்வு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 5:37:45 PM (IST)

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
புதன் 10, செப்டம்பர் 2025 4:15:51 PM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்!
புதன் 10, செப்டம்பர் 2025 4:02:00 PM (IST)
