» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

30% ஊதிய உயர்வு வேண்டும்: 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 3:34:44 PM (IST)



30 சதவீத ஊதிய உயர்வு கோரி நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அகவிலை படி கூட இல்லாமல் 12 மணி நேரத்திற்கு மேல் தினமும் உழைக்கும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 30% ஊதிய உயர்வு வேண்டும், 16% ஊதியத்தில் 10% மட்டும் வழங்கி விட்டு 6% ஊதியத்தை கொள்ளையடித்து வரும் தமிழக அரசும் - தனியார் நிறுவனத்தையும் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


மக்கள் கருத்து

பிரபுSep 12, 2025 - 04:56:57 PM | Posted IP 172.7*****

மக்களுக்காக இரவு பகல் பாராமல் தன் குடும்பங்களை விட்டுவிட்டு மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் கேட்கும் அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வு வழங்கி உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory