» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)

கருங்கல் அருகே பிறந்து 42 நாட்கள் ஆன பெண் குழந்தைக்கு வாயில் 'டிஸ்யூ' பேப்பரை திணித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். பெனிட்டாவுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் குழந்தை இறந்தது.இது தொடர்பாக கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், குழந்தையை வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெனிட்டா ஜெய அன்னாள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். குளச்சல் ஏ.எஸ்.பி., ரேகா ஆர். நங்லெட் நேரில் விசாரணை நடத்தினர்.  தன்னைவிட குழந்தையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால் கொன்றதாக பெனிடடா ஜெயஅன்னாள் கூறிய நிலையில், கருங்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory