» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நிபுணர் குழு ஆய்விற்கு பின்னரே பாலத்தில் போக்குவரத்து அனுமதி: விஜய் வசந்த் வலியுறுத்தல்

வியாழன் 9, மே 2024 3:19:48 PM (IST)

மார்த்தாண்டம் பாலத்தில் தரத்தை உயர்மட்ட நிபுணர் குழு பரிசோதித்து தர சான்றிதழ் வழங்கிய பின்னரே முழு உபயோகத்திற்கு அரசு கொண்டு வர வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதை திறந்த போது மக்கள் மத்தியில் இந்த பாலத்தின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்தது. நாளடைவில் பாலத்தின் மேல் போடப்பட்ட சாலையில் அடிக்கடி குண்டு குழிகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். ஒவ்வொரு முறையும் தேசிய நெடுஞ்சாலை துறை மேல் பூச்சு வேலைகள் மட்டும் செய்து வந்தது. இந்த சாலையை பராமரிக்காமல் நெடுஞ்சாலை துறை காலம் கடத்தி வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் பாலத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளது.

இனிமேலும் இந்த பாலத்தில் சகஜமாக போக்குவரத்து என்பது மக்களின் உயிரை பணயம் வைப்பதாகும். தேசிய நெடுஞ்சாலை துறை உடனடியாக இந்த பாலத்தின் தரத்தையும், உறுதியையும் சோதிக்க ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அவர்களின் அறிக்கையை வைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு ஆராய வேண்டும். இனி மேலும் மேல் பூச்சு வேலைகள் செய்யாமல் தரமாக செப்பனிட வேண்டும். அது வரையிலும் பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது.அது போல் இதே கால அளவில் கட்டப்பட்டு அடிக்கடி சேதமடையும் நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தினையும் நிபுணர் குழு மூலம் ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory