» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் உயர்வு!
திங்கள் 20, மே 2024 11:41:50 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் மழையால், பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 532 கனஅடி உபரிநீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், வெள்ள அபாயங்களைத் தடுக்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா். ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை ஆய்வு செய்து, பொதுப்பணித் துறையினருக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினாா்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் ஞாயிற்றுக்கிழமை காலையில் திறக்கப்பட்டு, விநாடிக்கு 532 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. பாசனக் கால்வாய் வழியாக 528 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது.
இங்கிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாக பெருக்கெடுத்துப் பாய்ந்ததால், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவி அருகே தடுப்பணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
பேச்சிப்பாறை அணை உபரிநீரால், குழித்துறை தாமிரவருணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. நீா்நிலைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டுவதற்காக இறங்கவோ கூடாது என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீா்மட்டம்: ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 45.72 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 1247 கனஅடியாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 48.82 அடியாகவும், நீா்வரத்து 626 கனஅடியாகவும் இருந்தது. சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 10.82 அடியாகவும், நீா்வரத்து 159 கனஅடியாகவும், சிற்றாறு 2 அணை நீா்மட்டம் 10.92 அடியாகவும், நீா்வரத்து 233 கனஅடியாகவும் இருந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 103.6 மி.மீ. மழை பெய்தது. பிற இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): கோழிப்போா்விளை- 82.4, திற்பரப்பு- 71.6, சிற்றாறு 1 - 64.6., களியல் - 60.8, பாலமோா்- 52.4, முள்ளங்கனாவிளை, தக்கலை - தலா 63.4, பெருஞ்சாணி - 38.6, நாகா்கோவில் - 32.6 மி.மீ.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 30, ஏப்ரல் 2025 12:49:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் தமிழ்வார விழா: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:10:36 PM (IST)

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
திங்கள் 28, ஏப்ரல் 2025 5:01:42 PM (IST)

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)
