» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தாமரைகுளம் அளத்தம்மன் கோயில் குடமுழுக்கு விழா

திங்கள் 20, மே 2024 11:39:43 AM (IST)தாமரைகுளம் அளத்தம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. 

குமரி மாவட்டத்தில் பழமையும் தொன்மையும் வாய்ந்த தாமரைகுளம் பழைய அளம் அளத்தம்மன் என்னும் அளத்து பத்திரகாளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யாக பூஜைகளுடன் புனித குடமுழுக்கு விழா நடைபெற்றது. 

கோயில் பிரசாதத்துடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி, அகத்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு, தென் தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா, ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி தன சம்பத், பண்ணையார் சமுதாயத் தலைவர் சுடலை மணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory