ராமராஜன் நடிக்கும் சாமானியன் படத்தின் டீஸர்!

Sponsored Ads


ராமராஜன் நடிக்கும் சாமானியன் படத்தின் டீஸர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 20, செப்டம்பர் 2022
நேரம் 12:19:50 PM (IST)

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன், கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் மீண்டும் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது அவரது 45வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிடோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. எட்சட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இசை- அச்சு ராஜாமணி. கதை- வி கார்த்திக் குமார், திரைக்கதை, இயக்கம் - ஆர். ராஜேஷ்.Thoothukudi Business Directory