» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!!
வெள்ளி 27, ஜூன் 2025 11:13:59 AM (IST)
கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடைமுறையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த 345 அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், இக்கட்சிகளின் அலுவலகங்களை எங்கும் நேரடியாக வைத்திருக்க முடியாது. எதிர்காலத்தில் இக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட 2,800-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில், பல கட்சிகள் தங்களின் அத்தியாவசிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன என்பது ஆணையத்தின் கவனத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, இக்கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதாரை ஏற்காதது ஏன்? - தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 4:39:42 PM (IST)

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:09:14 PM (IST)

த.வெ.க. பேனர்களில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்த தடை!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:53:40 PM (IST)

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
திங்கள் 21, ஜூலை 2025 12:33:27 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணிக்கு டெபாசிட் கூட கிடைக்காது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஞாயிறு 13, ஜூலை 2025 6:30:36 PM (IST)

2026 தேர்தலுக்கு கற்பனை வீடியோ போதும் என்று நினைத்து விட்டார்கள் : முதல்வர் விமர்சனம்!
செவ்வாய் 17, ஜூன் 2025 4:57:38 PM (IST)
