» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மெளனம் ஏன்? கார்கேவுக்கு நட்டா கடிதம்!
திங்கள் 24, ஜூன் 2024 4:32:31 PM (IST)
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மெளனமாக இருப்பது ஏன்? என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இத்தகைய பேரிடர் நடந்த போது, உடனடியாக மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அரசும் காவல்துறையும் பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதில் மும்முரமாக இருந்தது. அதனால், மேலும் பலர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இது அரசு நடத்திய கொலை.
இந்த சம்பவம் குறித்து விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள திமுகவின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். மாநில காவல்துறையோ, சிபிசிஐடி காவல்துறையினரோ நேர்மையான விசாரணை நடத்துமா?
கருணாபுரம் பகுதியில் அதிகளவில் தலித் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர். இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தபோது, உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி மௌனம் காத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அரசுக்கு எதிராக குரல் கொடுக்காமல், மக்களையே குறை கூறியுள்ளார்.
இத்தருணத்தில், சிபிஐ விசாரணைக்கு செல்லவும், முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவும் திமுக-இந்தியக் கூட்டணி தமிழக அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று பாஜகவும் ஒட்டுமொத்த தேசமும் கோருகின்றன.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அமைதியை கடைபிடிப்பதை கைவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்றாலும், இப்பிரச்னை குறித்து குறைந்தபட்சம் குரல் எழுப்பவேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு நடைபெறும் போராட்டத்தில் உங்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை தேர்தல் ஆணையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
புதன் 27, ஆகஸ்ட் 2025 4:16:06 PM (IST)

ஆதாரை ஏற்காதது ஏன்? - தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 4:39:42 PM (IST)

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:09:14 PM (IST)

த.வெ.க. பேனர்களில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்த தடை!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:53:40 PM (IST)

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
திங்கள் 21, ஜூலை 2025 12:33:27 PM (IST)

காந்திJul 12, 2024 - 03:38:55 PM | Posted IP 172.7*****