» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (கன்னியாகுமரி)

மத்திய அரசு துறைகளில் 3,134 காலி பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி அறிவிப்பு

புதன் 25, ஜூன் 2025 10:36:10 AM (IST)

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,134 பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 3,134 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள் விவரம் :

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC),

ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ

ஆகிய பிரிவுகளில் 3,134 காலி பணியிடங்கள்


கல்வி தகுதி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணித பாடப்பிரிவு எடுத்து படித்து இருப்பது அவசியம். எல்.டிசி பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவர்களும் 27 வயது பூர்த்தி அடையாதவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சம்பளம் : பணிக்கு தகுந்தபடி மாறுபடும், அதிகபட்சமாக ரூ. 29,200 - 92,300/ வரை

விண்னப்பிக்க கடைசி நாள் : 18.07.2025

விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : கணிணி வழியில் இரண்டு கட்ட தேர்வு நடைபெறும்:

தேர்வு அறிவிப்பினை படிக்க : https://ssc.gov.in/


மக்கள் கருத்து

A. AnnapackiamJul 3, 2025 - 08:27:50 PM | Posted IP 162.1*****

I cleared 12 exam I need government job

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பதிவாகவில்லை

Sponsored Ads



Thoothukudi Business Directory