» சினிமா » செய்திகள்
புதிய படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:51:12 AM (IST)
தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனித்துவமான மேக்கிங் பாணியைக் கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
'பீட்சா' மூலம் அறிமுகமாகி 'ஜிகிர்தண்டா', 'பேட்ட', 'மகான்' எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தின் ரெட்ரோ காலக்கட்ட உருவாக்கம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது முன்னணி நடிகர்களுக்குப் பதில், முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களை வைத்து ஒரு சுயாதீனத் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இப்படத்தைப் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிப் திரையிடத் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னரே திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. கார்த்திக் சுப்புராஜின் இந்தச் சுயாதீன முயற்சித் திரையுலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராசக்தி பட சம்பள பாக்கி விவகாரம்: டான் பிக்சர்ஸ் நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 2, ஜூலை 2026 11:45:39 AM (IST)

பாலிவுட் சூப்பர்ஹிட் படங்களின் உண்மையான அஸ்திவாரம் பாக்யராஜ்: அனில் கபூர் நெகிழ்ச்சி!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:12:00 PM (IST)

ஐந்து ரூபாய் மருத்துவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:05:34 PM (IST)

ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது: கமல்ஹாசன் இரங்கல்!
சனி 27, ஜூன் 2026 5:50:53 PM (IST)

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதன் 24, ஜூன் 2026 10:36:52 AM (IST)

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:30:06 PM (IST)

