» சினிமா » செய்திகள்
ஜனநாயகன் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் : சிவகார்த்திகேயன் பேச்சு
திங்கள் 5, ஜனவரி 2026 4:21:40 PM (IST)

ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.10-ல் வெளியாகிது. இதன் பாடல் வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, "பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்தப் படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாக காட்டுகிறது.
படத்தின் உள்ளடக்கம் குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கிறோம். இதில் ரவிமோகன் சார், பவர்புல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள். 33 வருடம் திரைத் துறையில் மகிழ்வித்தவர். கடைசி படம் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே ஜனவரி 9ம் தேதி அதை கொண்டாட வேண்டும். அடுத்த நாள் ஜனவரி 10ம் தேதி ‘பராசக்தி’ படத்துக்கு வாருங்கள்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

ஜனநாயகன்’ பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாட வேண்டும்: ஆனந்த் அறிவுறுத்தல்!
சனி 18, ஜூலை 2026 4:16:27 PM (IST)

ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 6, ஜூலை 2026 12:28:49 PM (IST)

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் 6 இயக்குநர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 12:09:16 PM (IST)

அரசன் படம் வசூலில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும்: தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை!
சனி 4, ஜூலை 2026 5:36:02 PM (IST)

