» சினிமா » செய்திகள்

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

சனி 20, டிசம்பர் 2025 11:29:16 AM (IST)



பிரபல மலையாள இயக்குநரும் நடிகருமான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.

புகழ்பெற்ற மலையாள நடிகர், திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் (69 வயது) உடல்நலக்குறைவால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச. 20) காலமானார். இவர், தமிழில் லேசா லேசா, புள்ளகுட்டிக்காரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவருக்கு விமலா என்ற மனைவி, மலையாளத்தில் பிரபல இயக்குநர் - நடிகராக இருக்கும் வினீத் ஸ்ரீவாசன் என்ற மூத்த மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தியான் ஸ்ரீனிவாசன் என்ற இளைய மகனும் உள்ளனர். ஸ்ரீனிவாசன் மறைவையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்களும் எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீனிவாசன் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தேசிய விருது பெற்ற வடக்கினோக்கியந்திரம், சிந்தாவிஷ்டயாய ஷியாமளா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 6 முறை கேரள மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் திரைக்கதை, வசனம் எழுதிய பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. 

48 ஆண்டு காலம் அவர் சினிமாவில் பணியாற்றியுள்ளார். காமெடி கலந்து திரைக்கதை எழுதுவதில் வல்லவர். மோகன்லாலுடன் பல படங்களில் நடித்துள்ளார். மகன் வினீத் ஸ்ரீனிவாசனுடனும் பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory