» சினிமா » செய்திகள்
குட்டி தளபதி, திடீர் தளபதி: சிவகார்த்திகேயன் விளக்கம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:35:59 AM (IST)

குட்டி தளபதி, திடீர் தளபதி என்ற தன் மீதான விமர்சனங்கள் குறித்து மதராஸி பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ''விஜய் சார் கூட நான் நடித்தது நிறைய பேருக்கு சந்தோஷம். ஆனால் சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் செய்தார்கள். அவர் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன்.
நான் அவருடைய ரசிகர்களை பிடிக்கப் பார்க்கிறேன்னு சொன்னாங்க, ரசிகர்களை அப்படி யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். எப்போதும் அண்ணன் அண்ணன்தான்... தம்பி தம்பிதான். ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன். ஆனால் இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று கேட்கிறார்கள். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்? என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காந்தா படத்துக்கு எதிராக வழக்கு: ராணா பதிலடி
வியாழன் 13, நவம்பர் 2025 3:52:57 PM (IST)

ரஜினி படத்திலிருந்து இயக்குநர் சுந்தர். சி விலகல்!
வியாழன் 13, நவம்பர் 2025 3:32:58 PM (IST)

உருவ கேலி: யூடியூபருக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:41:03 PM (IST)

அனைவருக்கும் மறக்க முடியாத படமாக காந்தா இருக்கும் : துல்கர் சல்மான் நம்பிக்கை
வெள்ளி 7, நவம்பர் 2025 3:38:50 PM (IST)

மீண்டும் இணையும் ரஜினி - சுந்தர்.சி காம்போ: கமல்ஹாசன் அறிவிப்பு!
வியாழன் 6, நவம்பர் 2025 10:17:28 AM (IST)

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் டப்பிங்: நடிகர் சாய்குமார் சாதனை!!
புதன் 5, நவம்பர் 2025 3:55:00 PM (IST)

