» சினிமா » செய்திகள்
நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:46:13 PM (IST)
தனது 100-வது படத்தை ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் இயக்க உள்ளதாக நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகார்ஜுனாவும் இணைய உள்ளார். தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த அரிதான சாதனையை கொண்டுள்ளனர். குபேரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் நாகார்ஜுனா ஜப்பானில் பெரும் புகழைப் பெற்றுள்ளார். அங்குள்ள சினிமா ரசிகர்கள் இவரை 'நாக்-சமா' என்று அன்புடன் அழைக்கின்றனர். சமீபத்தில் 'கூலி' திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது. இதனை நாகார்ஜுனா பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார்.இது குறித்து கூறிய அவர், "தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் என்னுடைய 100-வது படம் உருவாகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். ‘கூலி’ தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. "இது ஆக்ஷன், பேமிலி சென்டிமென்ட், டிராமா கலந்து உருவாகும் படம். இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன்” என்று நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2025-ல் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் துரந்தர் முதலிடம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:38:09 AM (IST)

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?
வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)

ஜன நாயகனுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:34:07 PM (IST)

அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:57:00 AM (IST)

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!
சனி 20, டிசம்பர் 2025 11:29:16 AM (IST)

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

