» சினிமா » செய்திகள்
ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சிவராஜ்குமார்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:11:19 PM (IST)

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்திருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தமிழக – கேரளா எல்லையில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்ணா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பார்களா என்ற கேள்வி நிலவி வந்தது. தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்திருக்கிறார் ‘ஜெயிலர்’ படத்துக்கான வரவேற்பு குறித்து, "‘ஜெயிலர்’ படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், கண்டிப்பாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
ஆனால், உண்மையில் இவ்வளவு பெரிய அன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. . ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருக்கிறேன். எனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்” என சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகல்?
புதன் 15, ஏப்ரல் 2026 10:34:23 AM (IST)

புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:40:08 PM (IST)

இணையத்தில் ஜனநாயகன் படக்கசிவு: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி, சூர்யா வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 5:27:14 PM (IST)

அனிருத் செய்த உதவி.. மேடையிலேயே கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!
புதன் 8, ஏப்ரல் 2026 5:03:35 PM (IST)

அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம்: வைரமுத்து வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:38:50 AM (IST)

தலைவர் 173 படப்பிடிப்பு ஏப்.27-ல் தொடக்கம்: சிபி சக்கரவர்த்தி தகவல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:28:02 PM (IST)

