» சினிமா » செய்திகள்
தனுஷின் 56-ஆவது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 10:45:02 AM (IST)

நடிகர் தனுஷின் 56ஆவது திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்.9இல் வெளியானது. இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் 56ஆவது படத்தின் அறிவிப்பு நேற்றிரவு (ஏப்.9) வெளியானது. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக ஐசரி கே. கணேஷன் தயாரிக்கிறார்.
தற்போது, மாரி செல்வராஜ் தனது 5ஆவது படமான பைசன் என்ற படத்தை துருவ் விக்ரமை வைத்து இயக்கி வருகிறார். 6ஆவது படமாக தனுஷை இயக்குகிறார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது: கர்ணனின் வாளால் உருவாக்கப்பட்ட பயணத்தின் 4வது ஆண்டைக் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி! இத்தனை ஆண்டுகளாக கர்ணனைக் கொண்டாடி ஆதரித்த அனைவருக்கும் நன்றி.
எனது அடுத்த படம் மீண்டும் என் அன்பான தனுஷுடன் என்பதைச் சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! இது நீண்ட காலமாக என் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது, மீண்டும் தனுஷுடன் கைகோர்ப்பதில் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்! ஐசரி கே.கணேஷ் சாருடன் இது எனது முதல் படம். அவருடன் இணைந்ததுக்கு நான் மிகவும் மகிழ்கிறேன். இது உண்மையிலேயே ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)
