» சினிமா » செய்திகள்
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவு: வைரமுத்து இரங்கல்!!
புதன் 9, ஏப்ரல் 2025 5:09:52 PM (IST)
போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும் என்று குமரி அனந்தன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93). மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, குமரி அனந்தன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது. அரசியல்வாதிகளுக்குள் ஓர் இலக்கியவாதி இலக்கியவாதிகளுக்குள் ஓர் அரசியல்வாதி தமிழுக்காக ஒன்றிய அரசிடம் ஓயாமல் போராடிய உரிமைவீரர் குமரி அனந்தன்.
போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும். நடைப் பயணங்களால் நாடுசுற்றிய நாயகன் கண்மூடிக்கொண்டு கேட்டால் அவர்பேச்சு உரைநடைச் சங்கீதமாய் ஒலிக்கும் ஒரு தமிழாளன் தவறிவிட்டான். தளராத கொள்கையாளன் தவறிவிட்டான் என்று சோகம் கப்புகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அனந்தன் என்றால் முடிவற்றவன் அனந்தனும் முடிவற்றவர்தான் தமிழிலும் புகழிலும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மறைவு : கன்னடத் திரையுலகில் சோகம்!
புதன் 13, மே 2026 3:58:15 PM (IST)

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது! - விஜய்க்கு பார்த்திபன் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 12:33:35 PM (IST)

ஜனநாயகன்' படக் கசிவு விவகாரம்: துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வெள்ளி 1, மே 2026 11:04:13 AM (IST)

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

