» சினிமா » செய்திகள்
ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேசியிருக்க கூடாது : நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார்!
புதன் 9, ஏப்ரல் 2025 12:46:33 PM (IST)

பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம்.. ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர் தி டாகுமெண்டரி... இதுல அவரைப்பற்றி பேசுவதற்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடன் நெருங்கிய நெருக்கம், அன்பு, மரியாதை காட்டியவர்களில் மூன்று, நான்கு பேர். அதாவது, பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.பி. சார். இவங்க எல்லாம் இல்லைங்கற போது சில நேரத்தில் ரொம்ப மிஸ் பண்றோம்.
'பாட்ஷா' 100-வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பேசினேன். அமைச்சர் மேடையில் இருக்கும் போது பேசியிருக்க கூடாது. அப்போ எனக்கு தெளிவு இல்லை. பேசிட்டேன். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.வீரப்பனை, புரட்சித்தலைவி பதவியில் இருந்து தூக்கிட்டாங்க.
எப்படி அது நீங்க அமைச்சர் மேடையில் இருக்கும் போது ரஜினி, அரசுக்கு எதிராக பேசினால் சும்மா இருக்க முடியும் என்று சொல்லி எம்.ஆர்.வீரப்பனை பதவியில் இருந்து தூக்கினாங்க. அது தெரிந்த உடனே எனக்கு ஆடிப்போச்சு. என்னால தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலை. போன் பண்ணா யாருமே எடுக்கலை. மறுநாள் காலையில் நேரில் போய் சாரி சார் என்னால தான் ஆனது என்று சொன்னார்.
அவர் எதுவுமே நடக்காத மாதிரி.. அதெல்லாம் விடுங்க... அதைப்பற்றி கவலைப்படாதீங்க... மனசுல வெச்சுக்காதீங்க... நீங்க விடுங்க. சந்தோஷமா இருங்க... எங்க ஷுட்டிங் என்று சாதாரணமா கேட்டார். எனக்கு அந்த தழும்பு எப்போதும் போகாது. போகலை. ஏன் என்றால் நான் தான் கடைசியா பேசினது. நான் பேசினதுக்கு பிறகு அவரு எப்படி வந்து பேச முடியும். மதிப்பிற்குரிய ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகார்த்திகேயனின் பராசக்தி பொங்கல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 13, செப்டம்பர் 2025 10:51:37 AM (IST)

லோகா திரைப்படத்தின் வெற்றி எதிரொலி : காந்தா ரிலீஸ் தேதி மாற்றம்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:32:03 PM (IST)

விக்ரம் படம் டிராப்... ஃபகத் பாசிலை இயக்கும் மெய்யழகன் இயக்குநர் பிரேம் குமார்!
புதன் 10, செப்டம்பர் 2025 12:37:31 PM (IST)

பொங்கல் ரிலீஸ் பந்தயத்தில் விஜய் உடன் மோதும் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:08:06 PM (IST)

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் இன்பன் உதயநிதி!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:47:54 PM (IST)
