» சினிமா » செய்திகள்
பாெங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் - விஜய் படங்கள் மோதல்?
செவ்வாய் 25, மார்ச் 2025 3:50:05 PM (IST)

விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்” - சிவகார்த்திகேயன் நடித்துள்ள "பராசக்தி” பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துவரும் 'ஜன நாயகன்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருமென நேற்று அறிவித்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இலங்கையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தியும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.அதன்பின்னரே 'ஜன நாயகன்' படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்தது.
ஆனால், 'பராசக்தி' படக்குழு 'ஜன நாயகன்' ரிலீஸ் தேதி அறிவிப்புக்குப் பின் மீண்டும் உறுதியாக 'பராசக்தி' பொங்கலுக்கு வெளியாகும் என மறைமுகமாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் ஒரே நேரத்தில் வெளியானால் அவைகளுக்கிடையே மிகப்பெரிய போட்டி உருவாகப்போவது உறுதி. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு: உறுதிபடுத்திய ஆதிக் ரவிச்சந்திரன்!
சனி 19, ஜூலை 2025 5:09:16 PM (IST)

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
வியாழன் 17, ஜூலை 2025 4:30:39 PM (IST)

படம் ரிலீசான முதல் 3 நாட்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க தடை: நடிகர் விஷால் வலியுறுத்தல்
வியாழன் 17, ஜூலை 2025 12:16:41 PM (IST)

படப்பிடிப்பு விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு: சரத்குமார் இரங்கல்!
புதன் 16, ஜூலை 2025 12:11:43 PM (IST)

ரஜினியின் கூலி ட்ரெய்லர் ஆக.2-ல் வெளியாகும் : லோகேஷ் கனகராஜ் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:33:58 PM (IST)

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)
