» சினிமா » செய்திகள்
எனது தாயார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை : பாடகி கல்பனாவின் மகள் விளக்கம்
வியாழன் 6, மார்ச் 2025 11:17:07 AM (IST)

"எனது தாயார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. தயவுசெய்து தவறான தகவலைப் பரப்பி விஷயத்தை பெரிதுபடுத்தாதீர்கள்" என்று பிரபல பின்னணி பாடகி கல்பனாவின் மகள் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகி கல்பனா தனது வீட்டில் மயங்கிய இருந்த நிலையில், ஹைதராபாத் போலீஸாரால் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கும் அவரின் மூத்த மகளுக்கும் பிரச்சினை என்றும், கல்பனா தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக கல்பனாவின் தற்கொலை முயற்சித்தாக கூறப்படுவதை அவரது மகள் மறுத்துள்ளார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து இன்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் பேசினார்.
கல்பனாவின் மகள் கூறுகையில், "எனது தாய்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் நலமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளார். அவர் ஒரு பாடகி. மேலும் முனைவர் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் எல்எல்பி படித்துவருகிறார். இது தூக்கமின்மைக்கு வழிவகுத்தது. இதனால், மருத்துவரின் பரிந்துரையின் படி, அவர் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டுவந்தார். மன அழுத்தம் காரணமாக அவர் சாப்பிட்ட மாத்திரையின் அளவு அதிகமாகிவிட்டது. தயவு செய்து தவறான தகவல்களை உருவாக்க வேண்டாம்.
எனது பெற்றோர் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். எனது குடும்பத்தில் அனைவரும் நலமாக உள்ளோம். அம்மா விரைவில் குணமாகி திரும்பி வருவார். இது தற்கொலை முயற்சி அல்ல. அவர் எடுத்துக்கொண்டு தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆகிவிட்டது. எனவே, தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகல்?
புதன் 15, ஏப்ரல் 2026 10:34:23 AM (IST)

புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:40:08 PM (IST)

இணையத்தில் ஜனநாயகன் படக்கசிவு: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி, சூர்யா வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 5:27:14 PM (IST)

அனிருத் செய்த உதவி.. மேடையிலேயே கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!
புதன் 8, ஏப்ரல் 2026 5:03:35 PM (IST)

அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம்: வைரமுத்து வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:38:50 AM (IST)

தலைவர் 173 படப்பிடிப்பு ஏப்.27-ல் தொடக்கம்: சிபி சக்கரவர்த்தி தகவல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:28:02 PM (IST)

